Wednesday, May 25, 2011

நாகரிகமா அப்படீனா

நம் ப்ளாக் குல மக்களே எப்படி இருக்கீங்க? ஒரு வழியா final இயர் ப்ராஜெக்ட் எல்லாம் முடிச்சிட்டு இப்பதான் உங்களை எல்லாம் சந்திக்கலாம்னு உக்காந்தேன்.  அப்பப்பா எத்தன டென்ஷன் தலைவலி இந்த ப்ரோஜெக்ட முடிகரதுக்குள்ள. இந்த போஸ்ட் போடுறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தன் ஒரு sms வந்துச்சு. ஒன்னும் இல்ல. இன்றைய அரசியல்ல பரபரப்பா பேசபடுற ஒரு பெண்மணிக்கும் அதே கட்சில மத்திய அமைச்சரா இருந்து இப்ப உள்ள இருக்குரவருக்குமான உறவை பத்தின sms. யாரோ சில வேல வெட்டி இல்லாதவங்க இந்த மாரி சில sms கள உலவ விடுறது வருத்தத்துக்கு உரியதா இருக்கு. யாரோ ஒருத்தர் உங்கள பார்த்து கமெண்ட் அடிச்சா கோவம் வருமா வராதா? அந்த sms உண்மையா இல்லையானு பேசுறத விட்டு அடுத்தவங்கள  பத்தி தவறான விஷயங்கள பேசுறதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம் நம்ம சமுதாயத்த பத்தி யோசிச்சு பாருங்க. இந்த மாரி புரளிகள யாரோ ஒருத்தர் கொளுத்தி போட, அது இப்ப இருக்குற நவீன தொலை தொடர்பு சாதனங்கள் மூலமா ரொம்ப வேகமா பரவுது. நான் கேக்குறேன் உங்க குடும்பத்து விஷயங்கள மூணாவது ஆள் ஒருத்தர் பேசுனா நீங்க சும்மா இருபிங்களா? ஆனா நாம மட்டும் அடுத்தவங்கள பத்தி பேசுறதுனா முன்னாடி நிப்போம். இந்த அநாகரிக செயல் இங்க மட்டும் தான் நடக்குது. வெளி நாடுகள்ள அடுத்தவங்களோட பர்சனல் விஷயங்கள பத்தி அந்த மக்கள் விவாதிக்கிறது இல்ல. இந்த மாரி விஷயங்கள பேசுற எத்தன பேர் தன்னோட பர்சனல் லைப்ல ஒழுக்கமா இருக்கது. பிரபலங்களா இருந்தா அவங்களோட வீடுக்குள்ள கண்ட கண்ட நாயும் எட்டி பாக்கலாமா. அடுத்தவங்கள ஒரு விரல்ல சுட்டி காட்டுறதுக்கு முன்னாடி மூணு விரல்கள் உங்கள சுட்டி காட்டுதுன்னு மறந்துடாதிங்க. இனிமேலாவது நாகரிக மனிதர்களா நடந்துக்குங்க. நாகரிகம் நம்ம போடுற டிரஸ்ல இருந்தா பத்தாது. நம்ம பழக்க வழக்கத்திளையும் வேணும்.


No comments:

Post a Comment