Saturday, April 2, 2011

உலக கோப்பை

என்னங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க? எல்லாரும் கண்டிப்பா மேட்ச் பாத்து இருப்பிங்க.... என்ன மேட்ச் இல்ல...... சச்சினும் சேவாகும் அவுட் ஆனோன நான் மேட்ச் அவ்ளோதான்னு நெனெச்சேன். பட் சும்மா சொல்ல கூடாது நம்ம பசங்க கிடச்ச சான்ச நல்ல use பண்ணிகிட்டாங்க... ஒவ்வொருத்தரோட ஆட்டத்துலயும் அர்ப்பணிப்பு தெரிஞ்சுது....... முக்கியமா நம்ம பீல்டிங். இது எல்லாத்துக்கும் மேல இது நம்ம சச்சினுக்கு கடைசி வேர்ல்ட் கப் மேட்ச். அனா என்ன நேரமோ தெரியல அவரோட அதிரடி ஆட்டத்த நம்மளால பாக்க முடியல. என்ன தான் சொல்லுங்க சச்சின் மாரி இனி ஒருத்தர் பொறந்துதான் வரணும். சச்சின் முகத்த பாக்கும்போது ஏதோ நம்ம கூட ரொம்ப நாள் பழகுன ஒருத்தர் நம்மள விட்டு பிரிஞ்சு போற மாதிரி இருந்துச்சு......... அனாலும் அவரோட கடைசி உலக கோப்பை போட்டி அவருக்கு மறக்க முடியாத வெற்றிய கொடுத்துருக்கு.... ஸ்ரீ லங்காவையும் சமமா  சொல்லகூடாது... எப்படியாவது ஜெயக்கனும்ன்ற வெறி அவங்க முகத்துல தெரிஞ்சுது. அனா நம்ம பசங்களோட ஆட்டத்துக்கு முன்னாடி எதுவும் எடுபடல....... நம்ம தலைவர் டோனி இந்த மேட்ச்ல நம்மள ஏமாத்தமா நம்மளோட இந்த வெற்றிக்கு முக்கிய காரணமா இருந்து பெருமை சேர்த்துருக்கார் ......... இந்தியா ஜெய்ச்சோன எங்க வீடு பக்கம் ஒரே தீபாவளி தான்........ எப்படியோ நம்ம பசங்க சாதிசிட்டங்க ........ east or west india is the பெஸ்ட்....