நம் ப்ளாக் குல மக்களே எப்படி இருக்கீங்க? ஒரு வழியா final இயர் ப்ராஜெக்ட் எல்லாம் முடிச்சிட்டு இப்பதான் உங்களை எல்லாம் சந்திக்கலாம்னு உக்காந்தேன். அப்பப்பா எத்தன டென்ஷன் தலைவலி இந்த ப்ரோஜெக்ட முடிகரதுக்குள்ள. இந்த போஸ்ட் போடுறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தன் ஒரு sms வந்துச்சு. ஒன்னும் இல்ல. இன்றைய அரசியல்ல பரபரப்பா பேசபடுற ஒரு பெண்மணிக்கும் அதே கட்சில மத்திய அமைச்சரா இருந்து இப்ப உள்ள இருக்குரவருக்குமான உறவை பத்தின sms. யாரோ சில வேல வெட்டி இல்லாதவங்க இந்த மாரி சில sms கள உலவ விடுறது வருத்தத்துக்கு உரியதா இருக்கு. யாரோ ஒருத்தர் உங்கள பார்த்து கமெண்ட் அடிச்சா கோவம் வருமா வராதா? அந்த sms உண்மையா இல்லையானு பேசுறத விட்டு அடுத்தவங்கள பத்தி தவறான விஷயங்கள பேசுறதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம் நம்ம சமுதாயத்த பத்தி யோசிச்சு பாருங்க. இந்த மாரி புரளிகள யாரோ ஒருத்தர் கொளுத்தி போட, அது இப்ப இருக்குற நவீன தொலை தொடர்பு சாதனங்கள் மூலமா ரொம்ப வேகமா பரவுது. நான் கேக்குறேன் உங்க குடும்பத்து விஷயங்கள மூணாவது ஆள் ஒருத்தர் பேசுனா நீங்க சும்மா இருபிங்களா? ஆனா நாம மட்டும் அடுத்தவங்கள பத்தி பேசுறதுனா முன்னாடி நிப்போம். இந்த அநாகரிக செயல் இங்க மட்டும் தான் நடக்குது. வெளி நாடுகள்ள அடுத்தவங்களோட பர்சனல் விஷயங்கள பத்தி அந்த மக்கள் விவாதிக்கிறது இல்ல. இந்த மாரி விஷயங்கள பேசுற எத்தன பேர் தன்னோட பர்சனல் லைப்ல ஒழுக்கமா இருக்கது. பிரபலங்களா இருந்தா அவங்களோட வீடுக்குள்ள கண்ட கண்ட நாயும் எட்டி பாக்கலாமா. அடுத்தவங்கள ஒரு விரல்ல சுட்டி காட்டுறதுக்கு முன்னாடி மூணு விரல்கள் உங்கள சுட்டி காட்டுதுன்னு மறந்துடாதிங்க. இனிமேலாவது நாகரிக மனிதர்களா நடந்துக்குங்க. நாகரிகம் நம்ம போடுற டிரஸ்ல இருந்தா பத்தாது. நம்ம பழக்க வழக்கத்திளையும் வேணும்.
Timepass
Wednesday, May 25, 2011
Saturday, April 2, 2011
உலக கோப்பை
என்னங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க? எல்லாரும் கண்டிப்பா மேட்ச் பாத்து இருப்பிங்க.... என்ன மேட்ச் இல்ல...... சச்சினும் சேவாகும் அவுட் ஆனோன நான் மேட்ச் அவ்ளோதான்னு நெனெச்சேன். பட் சும்மா சொல்ல கூடாது நம்ம பசங்க கிடச்ச சான்ச நல்ல use பண்ணிகிட்டாங்க... ஒவ்வொருத்தரோட ஆட்டத்துலயும் அர்ப்பணிப்பு தெரிஞ்சுது....... முக்கியமா நம்ம பீல்டிங். இது எல்லாத்துக்கும் மேல இது நம்ம சச்சினுக்கு கடைசி வேர்ல்ட் கப் மேட்ச். அனா என்ன நேரமோ தெரியல அவரோட அதிரடி ஆட்டத்த நம்மளால பாக்க முடியல. என்ன தான் சொல்லுங்க சச்சின் மாரி இனி ஒருத்தர் பொறந்துதான் வரணும். சச்சின் முகத்த பாக்கும்போது ஏதோ நம்ம கூட ரொம்ப நாள் பழகுன ஒருத்தர் நம்மள விட்டு பிரிஞ்சு போற மாதிரி இருந்துச்சு......... அனாலும் அவரோட கடைசி உலக கோப்பை போட்டி அவருக்கு மறக்க முடியாத வெற்றிய கொடுத்துருக்கு.... ஸ்ரீ லங்காவையும் சமமா சொல்லகூடாது... எப்படியாவது ஜெயக்கனும்ன்ற வெறி அவங்க முகத்துல தெரிஞ்சுது. அனா நம்ம பசங்களோட ஆட்டத்துக்கு முன்னாடி எதுவும் எடுபடல....... நம்ம தலைவர் டோனி இந்த மேட்ச்ல நம்மள ஏமாத்தமா நம்மளோட இந்த வெற்றிக்கு முக்கிய காரணமா இருந்து பெருமை சேர்த்துருக்கார் ......... இந்தியா ஜெய்ச்சோன எங்க வீடு பக்கம் ஒரே தீபாவளி தான்........ எப்படியோ நம்ம பசங்க சாதிசிட்டங்க ........ east or west india is the பெஸ்ட்....
Friday, March 4, 2011
arimugam
டும் டும் டும் டும் டும் டும் ........... இதனால் அனைத்து மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருந்த பிரபல வாசகர் ஆண்ட்ரியா பதிவுலகில் அடி எடுத்து வைத்துள்ளார். எனவே அவரது பதிவுகளை படித்து உங்கள் உலக அறிவை வளர்த்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ள படுகிறார்கள்..... டும் டும் டும் டும்.............. (எல்லாம் ஒரு விளம்பரம்தான்)
Subscribe to:
Posts (Atom)